BBL: ஜோஷ் பிரௌன், மெக்ஸ்வீனி காட்டடி அரைசதம்..! 20 ஓவரில் 224 ரன்களை குவித்தது பிரிஸ்பேன் ஹீட் அணி

By karthikeyan VFirst Published Jan 1, 2023, 3:32 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி வீரர்கள் ஜோஷ் பிரௌன் மற்றும் மெக்ஸ்வீனி ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 224 ரன்களை குவித்த பிரிஸ்பேன் ஹீட் அணி, 225 ரன்கள் என்ற கடின இலக்கை சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பிரிஸ்பேன் ஹீட்:

காலின் முன்ரோ, ஜோஷ் ப்ரௌன், நேதன் மெக்ஸ்வீனி, சாம் பில்லிங்ஸ், இம்மி பியர்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோஸ் ஒயிட்லி, மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பேஸ்லி, மார்க் ஸ்டெகெட்டீ, மேத்யூ குன்னெமேன், மிட்செல் ஸ்வெப்சன்.

அவரை மாதிரி டேலண்ட் தேடினாலும் கிடைக்காது.. ஒதுக்காமல் டீம்ல எடுங்க.! டிராவிட்டுக்கு கம்பீர் அறிவுரை

சிட்னி சிக்ஸர்ஸ்:

ஜோஷ் ஃபிலிப் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் வின்ஸ், டேனியல் ஹியூக்ஸ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் (கேப்டன்), ஜோர்டான் சில்க், டேனியல் கிறிஸ்டியன், ஹைடன் கெர், சீன் அபாட், பென் துவர்ஷியூஸ், ஜாக்சன் பேர்ட், இஜாருல்ஹக் நவீத்.

முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் பிரௌன் மற்றும் நேதன் மெக்ஸ்வீனி ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய ஜோஷ் பிரௌன் 23 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 62 ரன்களை விளாசினார்.

2வது ஓவரில் களத்திற்கு வந்த மெக்ஸ்வீனி கடைசி ஓவர் வரை களத்தில் நின்று அடித்து ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மெக்ஸ்வீனி, 51 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 224 ரன்களை குவித்தது பிரிஸ்பேன் ஹீட் அணி.

ஒருநாள் உலக கோப்பையில் ரோஹித்துடன் யார் ஓபனிங்கில் இறங்கவேண்டும்..? கௌதம் கம்பீர் அதிரடி

சிட்னி சிக்ஸர்ஸ் அணி 225 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டுகிறது.

click me!