எனது பதவிக்காலம் முடிவதற்குள் பாகிஸ்தானில் 2 அணிகள் உருவாக்குவதே எனது நோக்கம்: ஷாகீத் அப்ரிடி!

By Rsiva kumarFirst Published Jan 1, 2023, 1:38 PM IST
Highlights

தனது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக பாகிஸ்தானில் 2 அணிகளை உருவாக்குவதே எனது நோக்கம் என்று இடைக்கால தலைமை தேர்வாளராக உள்ள ஷாகீத் அப்ரிடி தெரிவித்துள்ளார்

கடந்த வாரம் ஆண்களுக்கான தேசிய தேர்வுக் குழுவின் இடைக்கால தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஷாகீத் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில், 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 4-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதோடு, டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது.

பின்ச் அதிரடி வீண்: 5ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பெர்த் அணி!

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஷாகீத் அப்ரிடி, பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சு சரியாக அமையவில்லை. ஷாகீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினர். ஆகையால், எனது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக பாகிஸ்தானில் 2 அணிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். மேலும், ஒவ்வொருவரையும் வலிமை வாய்ந்தவராக உருவாக்க வேண்டும். தேர்வுக்குழுவிற்கும், வீரர்களுக்கும் இடையில் போதுமான தகவல் தொடர்பு இல்லை.

மகளுடன் புத்தாண்டை கொண்டாடிய எம் எஸ் தோனி: வைரலாகும் வீடியோ!

வீரர்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனையை தனித்தனியாக பேசி தெரிந்து கொண்டேன். அதிலேயும், ஹரிஷ் ஷோகாலி மற்றும் பாஹர் ஜமான் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினேன். என்னைப் பொறுத்தவரையில் வீரர்களுக்கும், தேர்வுக்குழுவுக்கும் இடையே நேரடியான தொடர்பு இருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக நம்புகிறேன். 

அழகான 2022 ஆம் ஆண்டு நினைவுகளுக்கு நன்றி - ஷிகர் தவான்!

சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 138 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து டிக்ளேர் செய்தது. அவர் செய்தது தான் சரிதான் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு முதுகெலும்பாக பாபர் அசாம் இருக்கிறார். எப்போதும் அவருக்கு எங்களது ஆதரவு உண்டு. அவரது துணிச்சலான டிக்ளேர் செய்யும் முடிவு சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து வரும் 2 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

click me!