டீமில் இடமில்லை, டிவி பக்கமாக சென்று போலீஸ் அதிகாரியாக ரவுடிகளை அடித்து விரட்டும் ஷிகர் தவான்!

Published : Mar 21, 2023, 04:06 PM IST
டீமில் இடமில்லை, டிவி பக்கமாக சென்று போலீஸ் அதிகாரியாக ரவுடிகளை அடித்து விரட்டும் ஷிகர் தவான்!

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு வரும் ஷிகர் தவான் தற்போது தொலைக்காட்சி பக்கமாக தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.  

கடந்த 2010 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் அறிமுகமானார். தனது 100ஆவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த 9ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை 167 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 6793 ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 143 ரன்கள் குவித்துள்ளார்.

தம்பி டி20ல ஆடுற மாதிரி இதுலயும் ஆடக் கூடாது: சூர்யகுமார் யாதவ்விற்கு, சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடியது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார்.

பங்கு ஜெயிச்சுக்கிட்டே இருந்தால் தான் மரியாதை - இந்திய பயிற்சியாளருக்கு ரவி சாஸ்திரி அறிவுரை!

இதுவே அவரது கடைசி ஒரு நாள் போட்டி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் ஷிகர் தவான் இடம் பெறவில்லை. இவ்வளவு ஏன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரிலும் கூட அவர் இடம் பெறவில்லை.

ஸ்டார்க் பந்தில் விளையாடுவது ஒன்றும் கஷ்டமில்லை: ஜாகீர் கான் சொன்ன ஈஸியான வழி என்ன தெரியுமா?

ஆனால், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். வரும் 31 ஆம் தேதி தொடங்கும் 16ஆவது ஐபிஎல் சீசன் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில், இந்திய அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவான் தனது கவனத்தை தொலைக்காட்சி பக்கமாக திருப்பியுள்ளார். இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள தொலைக்காட்சி தொடர் குந்தலி பாக்யா (Kundali Bhagya). கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி முதல் ஜீ ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஆபத்தான கட்டத்தில் இந்தியா: உலக நம்பர் 1 அணிக்கான ரேஸில் ஆஸ்திரேலியா!

இதில், ஷ்ரத்தா ஆர்யா, தீரஜ் தோபர், ஷக்தி அரோரா, ஷக்தி ஆனந்த், பராஸ் கல்னாவத், பஷீர் அலி, சனா சயத் ஆகியோர் முன்னணி ரோலிலும், விஜய் காஷ்யப், சுப்ரியா ஷூக்லா, அஞ்சும் ஃபஹீ, மது ராஜா, நீலம் மெஹ்ரா ஆகியோர் உள்பட பலரும் இந்த தொடரில் நடித்துள்ளனர். இதில் ஒருவராக ஷிகர் தவான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், இந்த தொடரில் தனது காட்சியை முடித்துக் கொடுத்த நடிகை அஞ்சும் ஃபஹீ , தொடர்ந்து இயக்குநர் அபிஷேக் கவுர் மற்றும் ஷிகர் தவானுடன் இருக்கும் புகைப்படங்களை தவான் பி அவுர் தபாங் பி என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

 

 

இந்தப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், ஷிகர் தவானின் போலீஸ் கெட்டப் நன்றாக இருப்பதாகவும், இன்னும் சிலர் இப்படி நடிப்பதை விட்டு விட்டு மீண்டும் அணியில் இடம் பிடிப்பதில் கவனம் செல்த்த வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். ஷிவர் தவான் போலிஸ் கெட்டப் தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விரைவில் புதிய விஷயத்துடன் விரைவில் வருகிறது என்று பதிவிட்டுள்ளார். ஷிகர் தவான் இதற்கு முன்னதாக Double XL (டபுள் எக்ஸ் எல்) என்ற படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரேஷியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!
IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!