சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை தகர்க்கணுமா? இதை மட்டும் செய்ங்க! விராட் கோலிக்கு அக்தர் கொடுக்கும் ஐடியா

By karthikeyan V  |  First Published Mar 21, 2023, 2:53 PM IST

விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை கண்டிப்பாக தகர்ப்பார் என்று உறுதியாக நம்பும் ஷோயப் அக்தர், அதற்காக கோலிக்கு ஒரு ஆலோசனையையும் வழங்கியுள்ளார்.
 


சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், 2019ம் ஆண்டு நவம்பருக்கு பின் சுமார் 3 ஆண்டுகளாக சதமே அடிக்காமல் இருந்துவந்தார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக சதமடித்து மீண்டும் சத கணக்கை தொடங்கிய விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியிலும் சதமடித்தார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சதமடிக்காமல் இருந்துவந்த நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட்டில் சதமடித்து அந்த குறையையும் தீர்த்தார். 186 ரன்களை குவித்து அசத்தினார்.

Tap to resize

Latest Videos

அந்த 2 பசங்க மட்டும் தான் என்னைப்போல் அதிரடியா ஆடுறானுங்க..! வேற யாருமே இல்ல.. சேவாக் அதிரடி

இந்த சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்தார். விராட் கோலி மீண்டும் சதங்களையும் சாதனைகளையும் குவிக்க தொடங்கிவிட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட்டில் 28 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள் மற்றும் டி20யில் ஒரு சதம் என மொத்தமாக 75 சதங்களை விளாசி 2ம் இடத்தில் உள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் என்ற சாதனையை தகர்ப்பாரா மாட்டாரா என்று பேசப்பட்டுவரும் நிலையில்,  கண்டிப்பாக சச்சின் சாதனையை தகர்ப்பார் என்று ஷோயப் அக்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சச்சினின் 100 சத சாதனையை விராட் கோலி தகர்ப்பார் என்று உறுதியாக தெரிவித்துள்ள அக்தர், அதற்காக கோலிக்கு ஒரு ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

யார் பேச்சையும் கேட்காத.. 160 கிமீ வேகத்தில் வீசி மிரட்டு..! உம்ரான் மாலிக்கை உசுப்பேற்றும் இஷாந்த் சர்மா

இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை கண்டிப்பாக முறியடிப்பார். கோலிக்கு 34 வயது. கண்டிப்பாக இன்னும் 6 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடுவார். இந்த 6 ஆண்டில் 30-50 டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் மிகச்சுலபமாக 25 சதங்கள் அடிப்பார். எனவே சச்சின் சாதனையை கோலி முறியடித்துவிடுவார். ஆனால் அதற்கு அவரது ஃபிட்னெஸை பராமரிப்பது அவசியம். அதனால் டி20 கிரிக்கெட்டிலிருந்து விலகி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கோலி ஆடவேண்டும். டி20 கிரிக்கெட்டில் வீரர்களின் எனர்ஜி உறிஞ்சப்படும். எனவே கோலி இதை மட்டும் செய்ய வேண்டும் என்று அக்தர் கூறியுள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!

click me!