இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், கோலி, பும்ரா விளையாட வேண்டும் – காம்பீர் வேண்டுகோள்!

By Rsiva kumar  |  First Published Jul 16, 2024, 6:55 PM IST

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் விளையாடுமாறு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் வேண்டுகோள் வைத்துள்ளார்.


ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியானது 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது. இதையடுத்து டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மும்பையில் வெற்றி அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்களுக்கு வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.

Wimbledon and Rohit Sharma: 2024 சீசனில் 4.4 மில்லியன் லைக்குகள் பெற்ற ரோகித் சர்மாவின் விம்பிள்டன் போஸ்ட்!

Latest Videos

undefined

இந்த தொடரைத் தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், எஞ்சிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்று இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

Wimbledon: விம்பிள்டன் 2024: தொடர்ந்து 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாதனை!

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் புதிதாக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் காம்பீர் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பாரீஸ் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரை சென்ற வீரர்களுக்கு மேற்கு வங்க அரசு நிதியுதவி வழங்கவில்லை - அமித் மால்வியா

இலங்கை தொடருக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓய்வு கிடைக்கும் நிலையில் அந்த தொடரில் அவர்கள் விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இருக்கும் ஒரு மாதத்தில் ரோகித், கோலி மற்றும் பும்ரா ஆகியோர் ஓய்வு எடுக்கலாம். ஆதலால், இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ரோகித் சர்மா விளையாடினால், அவர் தான் கேப்டனாக இருப்பார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட காரணம் தொடர்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாண்டியா விலகல்!

IND vs SL T20I Series:

ஜூலை 26: இலங்கை – இந்தியா முதல் டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

ஜூலை 28: இலங்கை – இந்தியா 2ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

ஜூலை 30: இலங்கை – இந்தியா 3ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

IND vs SL ODI Series:

ஆகஸ்ட் 02: இலங்கை – இந்தியா முதல் ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

ஆகஸ்ட் 04: இலங்கை – இந்தியா 2ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

ஆகஸ்ட் 07: இலங்கை – இந்தியா 3ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

click me!