தனிப்பட்ட காரணம் தொடர்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாண்டியா விலகல்!

By Rsiva kumar  |  First Published Jul 16, 2024, 2:02 PM IST

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தனிப்பட்ட காரணமாக தொடர்பாக ஹர்திக் பாண்டியா இடம் பெற வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியானது 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தது. இதையடுத்து டிராபியோடு நாடு திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மும்பையில் வெற்றி அணிவகுப்பில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்களுக்கு வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.

Paris 2024 Olympics: பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகளின் முழு லிஸ்ட்!

Tap to resize

Latest Videos

இந்த தொடரைத் தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், எஞ்சிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்று இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Paris 2024 Olympics: இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ரூ.470 கோடி நிதியுதவி; தடகளத்துக்கு மட்டும் ரூ.96.08 கோடி!

இதன் காரணமாக ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இதில் ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் தான் தனிப்பட்ட காரணம் தொடர்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெற வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஹர்திக் பாண்டியா திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் நிலவி வருகிறது. ஐபிஎல் 2024 தொடரிலிருந்து அதனை எதிர்கொண்டு வரும் பாண்டியா, முகேஷ் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியிலும் தனியாக கலந்து கொண்டார். இதன் காரணமாக பாண்டியா அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக கூறப்படுகிறது.

TNPL 2024: முதல் முறையாக முடிவே இல்லாமல் முடிந்த போட்டி – இது என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை!

IND vs SL T20I Series:

ஜூலை 26: இலங்கை – இந்தியா முதல் டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

ஜூலை 28: இலங்கை – இந்தியா 2ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

ஜூலை 30: இலங்கை – இந்தியா 3ஆவது டி20 போட்டி, இரவு 7 மணி, பல்லேகலே

IND vs SL ODI Series: 

ஆகஸ்ட் 02: இலங்கை – இந்தியா முதல் ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

ஆகஸ்ட் 04: இலங்கை – இந்தியா 2ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

ஆகஸ்ட் 07: இலங்கை – இந்தியா 3ஆவது ஒருநாள் போட்டி, பிற்பகல் 2.30 மணி, கொழும்பு

click me!