ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.Cri
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதன் பிறகு உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடுகிறது. இன்றைய போட்டியின் மூலமாக கேஎல் ராகுல் 8ஆவது ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார். இந்திய அணியைப் பொறுத்த வரையில், இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உலகக் கோப்பையை கருத்தி கொண்டு முகமது சிராஜிற்குப் பதிலாக முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயரும் விளையாடுகிறார்.
இந்தியா:
சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி.
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், கேமரூன் க்ரீன், ஜோஸ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், மாத்யூ ஷார்ட், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபாட், ஆடம் ஜம்பா.
ஒரு கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடிய 7 போட்டிகளீல் 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளார். இதில், அவர் விளையாடிய 6 இன்னிங்ஸில் மொத்தமாக 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 68 மட்டுமே ஆகும். இதே போன்று ஒரு பிளேயராக 41 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 56 இன்னிங்ஸ்களில் 1645 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 112 ரன்கள் எடுத்தார்.