இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியானது ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்தியா ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று டிராபியை 8ஆவது முறையாக கைப்பற்றியது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
ஒரு நாள் போட்டிகளில் ஒரு கேப்டனாக கேஎல் ராகுல் படைத்த சாதனைகள் என்னென்ன?
தற்போது இந்தியா வந்துள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மொஹாலியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. மேலும், ஜியோ சினிமா மற்றும் இணையதளத்திலும் இந்தப் போட்டியானது லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க பிந்த்ரா மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இதுவரையில், இரு அணிகளும் நேருக்கு நேர் 146 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா 54 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
ஆனால், ஆதிரேலியா 82 ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதில், 10 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஹோம் மைதானங்களில் 30 போட்டிகளில் வெற்றியும், 14 அவே போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளது. பொதுவாக இடங்களில் 10 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா 2251 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் முகமது சிராஜ் 32 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 1574 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் பிரெட் லீ 46 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணி ஆசிய கோப்பை டிராபியை 8ஆவது முறையாக கைப்பற்றி வலுவான அணியாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் விளையாட உள்ளது.
இதில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் கடைசி நேரத்தில் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினர். எனினும் ஸ்டீவ் ஸ்மித் காயம் குணமடைந்த நிலையில் அணிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அதே போன்று தான் மிட்செல் ஸ்டார்க்கும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CWC 2023: டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் இலங்கை: அய்யா அவரு தான் கேப்டன்!