India vs Australia 1st Match: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இப்படியொரு மோசமான சாதனை வைத்திருக்கும் இந்தியா!

By Rsiva kumar  |  First Published Sep 22, 2023, 11:07 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 54 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னதாக தொடங்கும் இந்த ஒரு நாள் தொடர் இரு அணிகளுக்கும் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மொஹாலியில் தொடங்குகிறது.

IND vs AUS:இந்திய அணியில் யாருக்கு இடம்? ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவார்களா?

Tap to resize

Latest Videos

இன்றைய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக களமிறங்குகிறார். இதுவரையில் கேஎல் ராகுல் 7 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விளையாடி 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் கண்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 54 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

பேட் பிடித்த கையில் விநாயகருக்கு தீபாராதனை காட்டிய ரோகித் சர்மா; விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கிரிக்கெட்டர்கள்!

ஆனால், ஆதிரேலியா 82 ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதில், 10 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஹோம் மைதானங்களில் 30 போட்டிகளில் வெற்றியும், 14 அவே போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளது. பொதுவாக இடங்களில் 10 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வந்த ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா 2251 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் முகமது சிராஜ் 32 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

CWC 2023: டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் இலங்கை: அய்யா அவரு தான் கேப்டன்!

ஆஸ்திரேலியா அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ரிக்கி பாண்டிங் 1574 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் பிரெட் லீ 46 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணி ஆசிய கோப்பை டிராபியை 8ஆவது முறையாக கைப்பற்றி வலுவான அணியாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் விளையாட உள்ளது.

World Cup 2023:என்ன சோனமுத்தா போச்சா….இந்தியாவிடம் வாங்கிய அடி அப்படி – கேப்டன் பொறுப்பிலிருந்து ஷனாகா விலகல்?

இதில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க் கடைசி நேரத்தில் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினர். எனினும் ஸ்டீவ் ஸ்மித் காயம் குணமடைந்த நிலையில் அணிக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அதே போன்று தான் மிட்செல் ஸ்டார்க்கும் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!