ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 3ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது லீக் போட்டியானது தற்போது தொடங்குகிறது. இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
Asia Cup 2023: ஆசிய கோப்பையில் ஆதிக்கம் செலுத்தியது யார்? இந்தியாவா? பாகிஸ்தானா?
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்:
ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹரீஷ் ராஃப்
India vs Pakistan: கிளியராக இருக்கும் வானம்: டாஸ் திட்டமிட்டபடி போடப்படுமா?
இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காட்சி தருகிறது. எனினும், பாதுகாப்புக்காக மைதானம் முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தார்பாய் எடுக்கப்படும்.
கேஎல் ராகுல் இடம் பெறாத நிலையில் அவருக்குப் பதிலாக, விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூரும் அணியில் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியானது 2 வேகப்பந்து வீச்சாளர் 2 ஆல் ரவுண்டர் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளருடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியா விளையாடும் பெங்களூரு மற்றும் கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!