கோலி, ரோகித் சர்மாவுக்கு கிளம்பும் நேரம் வந்துருச்சா? பிருத்வி ஷாவிற்கு ஏன் வாய்ப்பு இல்லை? முரளி விஜய் கேள்வி

By Rsiva kumar  |  First Published Mar 15, 2023, 7:50 PM IST

தற்போது 30 வயதில் நடுப்பகுதியில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரைப் போன்று திறமை வாய்ந்த வீரர்களை இந்தியா விரைவில் தேடும் என்று முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
 


இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி திறமையால் நிரம்பியிருக்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் முதல் கடைசியில் 8, 9ஆவது இடங்களில் இறங்க கூடிய பவுலர்கள் கூட சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். இந்திய அணியில் கேப்டன்களாக செயல்பட விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 30 வயதில் நடுப்பகுதியில் இருக்கிறார்கள். அவர்களது இடங்களை நிரப்ப அவர்களைப் போன்று திறமை வாய்ந்த வீரர்களை இந்தியா விரைவில் தேடும்.

உள்ளேயா? வெளியேவா? ஆட்டத்தில் ஆர்சிபி; தோத்தா சீன் முடிஞ்சது! ஆர்சிபி பவுலிங்!

Tap to resize

Latest Videos

இதில், சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தங்களது திறமையை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள். ஆனால், பிரித்வி ஷாவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தக் கூடிய சரியான மைதானம் மட்டும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவர், 5 டெஸ்ட் போட்டிகள், 6 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டியில் மட்டும் விளையாடியிருக்கிறார்.

காயம் பட்ட தழும்புகளுடன் தண்ணீருக்குள் வாக்கிங் ஸ்டிக் வச்சு நடைபயிற்சி செய்யும் ரிஷப் பண்ட்!

இந்திய அணியில் இடம் பெற்று விளையாடதது குறித்து, முன்னாள் இந்திய தொடக்க வீரர் முரளி விஜய், ஷாவின் பக்கத்திலிருந்து விலக்கப்பட்டதை கேள்விக்குட்படுத்த முன் வந்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் ஷாவின் சிறந்த ஃபார்ம் இருந்தபோதிலும், ஷா ஏன் தொடர்ந்து தேர்வு செய்யப்படவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவர் கருத்து தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸைப் போன்று மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் தகுதி - வரலாற்று சாதனையில் டைட்டில் வின் பண்ணுமா?

அவர் இப்போது ஏன் விளையாடவில்லை என்று அணி நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். இந்தியாவுக்காக 15 சூப்பர்ஸ்டார்கள் விளையாடுகிறார்கள். நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்கனவே எனக்கு சூப்பர் ஸ்டார் தான். ஆனால் திறமையால் நான் ஷுப்மான் கில் மற்றும் பிருத்வி ஷாவை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் சிறந்த வீரர்கள். ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் சாதிக்க துடிக்கும் கேரளத்து இளம் புயல் - யார் தெரியுமா?

கில் மற்றும் பிருத்வி ஷாவைத் தொடர்ந்து கேஎல் ராகுல் குறித்து கூறியுள்ளார். சமீபகாலமாக தனது ஃபார்மை கண்டுபிடிக்க முடியாமல் தவித்து கேஎல் ராகுலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்பதால், அவரை தனியாக விட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மீண்டும் தனது பார்மிற்கு வருவதகு என்ன தேவை, என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். பொதுவாக ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இது நடக்கத்தான் செய்யும். கேஎல் ராகுல் அதை நிதானமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த நேரத்தை தனக்குத் தானே ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் வலுவாக மீண்டும் வரவும் பயன்படுத்த வேண்டும் என்று விஜய் கூறினார்.

ஷமி, உமேஷ் யாதவ், சிராஜிற்கு டியூப் பந்து அனுப்பி வைப்பு; நேரம் கிடைக்கும் போது பயிற்சி செய்ய அறிவுறுத்தல்!

click me!