இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 21ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் இரு அணிகளும் இன்று நடக்கும் 21 ஆவது லீக் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி தரம்சாலா மைதானத்தில் நடக்கிறது.
மிக முக்கியமான இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷான் இடம் பெற வாய்ப்புகள் இருக்கிறது. இதுவரையில் தோல்வியே தழுவாத இந்த இரு அணிகளிலும் எந்த அணி முதலில் தோல்வியை தழுவப் போகிறது என்பது இன்று இரவு 11 மணிக்குள் தெரிந்துவிடும்.
இந்தியா - நியூசிலாந்து 116 ஒரு நாள் போட்டிகள்:
கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளும் 116 முறை ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 58 போட்டிகளில் இந்தியாவும், 50 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 7 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. ஒரு போட்டியானது டையில் முடிந்துள்ளது.
India vs New Zealand: தேனீ கடியால் பாதிக்கப்பட்ட இஷான் கிஷான் – அவசர அவசரமாக முடிந்த பயிற்சி!
நியூசிலாந்து - இந்தியா சுற்றுப்பயணம்:
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்று இந்தியா கைப்பற்றியது. இதில் 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 385 ரன்கள் குவித்தது. மேலும், ரோகித் சர்மா 101 மற்றும் சுப்மன் கில் 112 ரன்கள் குவித்தனர். ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்று இந்தியா கைப்பற்றியது.
இந்தியா - நியூசிலாந்து உலகக் கோப்பை 9 போட்டிகள்:
இதுவரையில் இரு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 9 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 3 முறையும், நியூசிலாந்து 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது. இதில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 252 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 150 ரன்கள் ஆகும். இதே போன்று நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் 253 ரன்கள், குறைந்தபட்ச ஸ்கோர் 146 ரன்கள் ஆகும்.
2019 உலகக் கோப்பை:
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய நியூசிலாந்து 239 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
2003 - 2019 உலகக் கோப்பை:
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு முறை கூட உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடவில்லை.
ஐசிசி அணிகளின் தரவரிசைப் பட்டியல்:
ஐசிசி அணிகளின் தரவரிசைப் பட்டியலில் ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த நம்பர் 1 அணியாக இந்தியா திகழ்கிறது. ஆனால், நியூசிலாந்து சற்று பின் தங்கியிருக்கிறது. என்னதால், உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும், இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்தியாவிற்கு தான் சாதகமான சூழல் அமைந்துள்ளது.
தரம்சாலா:
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தரம்சாலா மைதானத்தில் இதுவரையில் 3 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறையும், 2ஆவது பேட்டிங் செய்த அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், அதிகபட்சமாக இங்கிலாந்து 364/9 ரன்கள் குவித்துள்ளது. குறைந்தபட்சமாக ஆப்கானிஸ்தான் 156/10 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021:
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்துள்ளது.
மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறு: டேவிட் வார்னர் சதம் அடிக்க காரணமாக உசாமா மிர்!
இந்தியா - நியூசிலாந்து 9 உலகக் கோப்பை போட்டிகள்:
நாள் | வெற்றி பெற்ற அணி | வித்தியாசம் | இடம் |
14.06.1975 | நியூசிலாந்து | 4 விக்கெட்டுகள் | மான்செஸ்டர் |
13.06.1979 | நியூசிலாந்து | 8 விக்கெட்டுகள் | டிரெண்ட் பிரிட்ஜ் |
14.10.1987 | இந்தியா | 16 ரன்கள் | செஞ்சூரியன் |
31.10.1987 | இந்தியா | 9 விக்கெட்டுகள் | நாட்டிங்காம் |
12.03.1992 | நியூசிலாந்து | 4 விக்கெட்டுகள் | டூனெடின் |
12.06.1999 | நியூசிலாந்து | 5 விக்கெட்டுகள் | நாக்பூர் |
14.03.2003 | இந்தியா | 7 விக்கெட்டுகள் | பெங்களூரு |
13.06.2019 | போட்டி ரத்து | ரத்து செய்யப்பட்டது | லீட்ஸ் |
09.07.2019 | நியூசிலாந்து | 18 ரன்கள் | மான்செஸ்டர் |