உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2ஆவது முறையாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடின. 45 லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
பைனலில் இந்தியாவுக்குத் தான் வெற்றி! கெத்தாகச் சொல்லும் தலைவர் ரஜினிநாந்த்!
undefined
இதையடுத்து நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் விளையாடி 397 ரன்கள் குவித்தது. 2ஆவதாக விளையாடிய நியூசிலாந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக முதல் அணியாக 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், 4 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணியை பழி தீர்த்துக் கொண்டது. இதையடுத்து நேற்று 2ஆவது அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையு இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா அணி கடைசி வரை போராடி 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 8ஆவது முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், 5 முறை சாம்பியானகியுள்ளது. மேலும், 1999, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டு என்று ஹாட்ரிக் முறையில் சாம்பியன் டைட்டில் வென்றுள்ளது.
ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இதற்கு முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இதற்கு பழி தீர்த்துக் கொள்ள இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 19 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.