அரையிறுதியில் இந்தியா அண்டர் 19 – வெற்றிக்கு வித்திட்ட உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே!

By Rsiva kumar  |  First Published Feb 3, 2024, 1:34 PM IST

ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் நேபாள் அணிக்கு எதிராக இந்தியா அண்டர் 19 அணியானது 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.


ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்ப தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், கேப்டன் உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. கடைசியாக நடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.

அம்மாவாக இருந்த மாமியார் மறைவு – அவசர அவசரமாக கான்பூர் சென்ற சுனில் கவாஸ்கர்!

Tap to resize

Latest Videos

இந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் நியூசிலாந்து, நேபாள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நமீபியா, ஜிம்பாப்வே, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அயர்லாந்து என்று 16 அணிகள் குரூப் ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளாக பிரிந்து விளையாடின.

இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸ் குரூப் 1 மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று குரூப் 2க்கு முன்னேறின. அதன்படி, இந்தியா அண்டர்19 விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்று 1க்கு தகுதி பெற்றது. இதில் இந்தியா உடன் இணைந்து பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, அயர்லாந்து, நேபாள் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.

19 பவுண்டரி, 7 சிக்ஸர் உள்பட 209 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - இந்தியா 396 ரன்கள் குவிப்பு!

இதே போன்று சூப்பர் சிக்ஸ் குரூப் 2விலும் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், குரூப் 1 பிரிவில் இடம் பெற்ற இந்தியா அண்டர் 19 மற்றும் நேபாள் அண்டர் 19 அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்தியா அண்டர் 19 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் குவித்தது.

இதில், அதிகபட்சமாக கேப்டன் உதய் சஹாரன் 107 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று சச்சின் தாஸ் 101 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 116 ரன்கள் குவித்தார். இதையடுத்து 298 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நேபாள் அண்டர் 19 அணி களமிறங்கியது. இதில், நேபாள் அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுக்கவே 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்து 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Yashasvi Jaiswal Double Century: டெஸ்ட் கிரிக்கெட் - இரட்டை சதம் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை!

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் சௌமி பாண்டே 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அர்ஷின் குல்கர்னி 2 விக்கெட்டும், ராஜ் லிம்பானி, முருகன் அபிஷேக் மற்றும் ஆராதயா சுக்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா அண்டர் 19 முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும், 6ஆம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Thalaivas: 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் – பிளே ஆஃப் கிடைக்குமா?

இதே போன்று மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா அண்டர் 19 அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலமாக இந்திய அண்டர் 19 மற்றும் தென் ஆப்பிரிக்கா அண்டர் 19 அணிகள் வரும் 6 அல்லது 8ஆம் தேதிகளில் நடக்கும் அரையிறுதிப் போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!