இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸ் ஆடியது. இதில், முதல் நாளில் ரோகித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஷ்ரேயாஸ் ஐயர் 27, ரஜத் படிதார் 32, அக்ஷர் படேல் 27 மற்றும் கேஎஸ் பரத் 17 ரன்கள் என்று ஒவ்வொரு சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்து முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்திருந்தது. இதில், யஷஸ்வி ஜெஸ்ய்வால் 179 ரன்கள் எடுத்து விளையாடி வந்தார்.
பின்னர், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தார். இதில், அஸ்வின் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 19 பவுண்டரி,7 சிக்ஸர் உள்பட 209 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் இணைந்து கொண்டார்.
Tamil Thalaivas: 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் தலைவாஸ் – பிளே ஆஃப் கிடைக்குமா?
அதன் பிறகு வந்த ஜஸ்ப்ரித் பும்ரா 6 ரன்களில் ஆட்டமிழக்க முகேஷ் குமார் ரன் ஏதும் இல்லாமல் வெளியேற குல்தீப் யாதவ் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அகமது மற்றும் சோயிப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டாம் ஹார்ட்லி ஒரு விக்கெட் எடுத்தார்.
India vs England 1st Test Day 1: யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்பான் சதம் – இந்தியா 336 ரன்கள் குவிப்பு!