ரோகித், கோலி, ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு: கேப்டனான கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், அஸ்வினுக்கு வாய்ப்பு!

By Rsiva kumar  |  First Published Sep 18, 2023, 9:09 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 13ஆவது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடர் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

ரோகித், கோலி, பும்ரா, பாண்டியாவிற்கு ஓய்வு? ஆஸ்திரேலியா சீரிஸில் யாருக்கு வாய்ப்பு?

Tap to resize

Latest Videos

இந்த தொடர் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட 10 மைதானங்களில் நடக்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் வரும் அக்,8 ஆம் தேதி நடக்கிறது.

ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது.

SL vs IND: பாஸ்போர்ட்டை ஹோட்டல் அறையில் மறந்து வைத்துவிட்ட வந்த ரோகித் சர்மா – கிண்டல் செய்த வீரர்கள்!

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 2 ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகியுள்ளார்.

மேலும், ருதுராஜ் கெய்க்வாட், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் ஏற்கனவே ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றவர்கள் தான். ஆனால், கடைசி ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

IND s AUS: ஒருநாள் தொடரை கைப்பற்ற பிளானோடு வரும் ஆஸ்திரேலியா: ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட டீம் அறிவிப்பு!

உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் வார்ம் அப் போட்டிகளில் விளையாடுகிறது. அதன் பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கிறது.

முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான இந்திய வீரர்கள்:

கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா.

3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டிக்கான இந்திய வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்

SL vs IND: விராட் கோலி மாறி நடந்து காட்டிய இஷான் கிஷான் – வைரலாகும் வீடியோ!

Squad for the 3rd & final ODI:

Rohit Sharma (C), Hardik Pandya, (Vice-captain), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, Suryakumar Yadav, KL Rahul (wicketkeeper), Ishan Kishan (wicketkeeper), Ravindra Jadeja, Shardul Thakur, Axar Patel*, Washington Sundar, Kuldeep Yadav, R…

— BCCI (@BCCI)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் 22 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் நடக்கிறது. அதன் பிறகு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இதையடுத்து நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

செப்டம்பர் 22 – இந்தியா – ஆஸ்திரேலியா – முதல் ஒரு நாள் போட்டி – மொஹாலி – பிற்பகல் 1.30 மணிக்கு

செப்டம்பர் 24 – இந்தியா – ஆஸ்திரேலியா – 2ஆவது ஒரு நாள் போட்டி – இந்தூர் – பிற்பகல் 1.30 மணிக்கு

செப்டம்பர் 27 - இந்தியா – ஆஸ்திரேலியா – 3ஆவது ஒரு நாள் போட்டி – ராஜ்கோட் – பிற்பகல் 1.30 மணிக்கு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் ரேங்கிங்கில் நம்பர் ஒன் இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 115 புள்ளிகள் பெற்று நம்பர் 1 இடத்தில் பாகிஸ்தானும், இந்தியா 115 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா 113 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!