இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி.
டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்ததும், ஜூலை 7, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடக்கவுள்ளன.
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் கொரோனா காரணமாக ரோஹித் சர்மா ஆடவில்லை. அதனால் பும்ரா கேப்டனாக செயல்படவுள்ளார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ரோஹித் சர்மா ஆடுகிறார்.
இதையும் படிங்க - இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமனம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஒருநாள் அணியில் இளம் ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுல் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதனால் ஒருநாள் அணியில் ஷிகர் தவான், இஷான் கிஷன் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க - ENG vs IND: அவனுங்க எப்படி ஆடுனா எங்களுக்கென்ன.? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல - செம கெத்தா பேசிய ராகுல் டிராவிட்
முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல
2 மற்றும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.