டி20 உலக கோப்பை: பும்ரா குறித்து தடாலடியாக பேசிய கேப்டன் ரோஹித் சர்மா

By karthikeyan V  |  First Published Oct 15, 2022, 6:52 PM IST

டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாதது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை வரும் 16ம் தேதி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் ஆடுகிறது.

இந்த டி20 உலக கோப்பையில்  ஜடேஜா, பும்ரா ஆகியோர் காயம் காரணமாக ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு. குறிப்பாக பும்ரா ஆடாதது பெரும் பின்னடைவு. நன்றாக பவுன்ஸாகும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பும்ரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். ஆட்டத்தின் எந்த சூழலிலும் அபாரமாக பந்துவீசக்கூடிய ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாதது பெரும் பின்னடைவு.

Latest Videos

undefined

இதையும் படிங்க - அரியலூர் கொலை சம்பவத்துக்கு காரணம் கோலியா..? கோலியை கைது பண்ணுங்க.. கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்

பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது ஷமி அறிவிக்கப்பட்டுள்ளார்.  அவரும் சீனியர் பவுலர் தான் என்றாலும், டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் பும்ரா தான் டாப் பவுலர். 

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடாதது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, காயங்கள் ஏற்படுவது சகஜம் தான். அதற்கெல்லாம் அதிருப்தியடைய முடியாது. நாம் என்ன செய்யமுடியும் என்பதை பற்றி மட்டும்தான் யோசிக்கவேண்டும். சில வீரர்களுக்கு முக்கியமான வாய்ப்புகளை அளித்திருக்கிறோம். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய பாகிஸ்தான் வாரிசு வீரர்.. மாற்று வீரராக அணிக்குள் நுழைந்த அதிரடி மன்னன்

பும்ரா இந்திய அணிக்காக அபாரமாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் காயங்கள் ஏற்படுவது சகஜம். நம்மால் எதுவும் செய்யமுடியாது. ஸ்பெஷலிஸ்ட்டுகளிடம் பும்ரா குறித்து பேசினோம். உலக கோப்பை முக்கியம் தான். ஆனால் அதைவிட பும்ராவின் கெரியர் முக்கியம். அவருக்கு 27-28 வயதுதான். அவரை ஆடவைத்து ரிஸ்க் எடுக்கமுடியாது. அவர் இன்னும் நிறைய கிரிக்கெட் ஆடவேண்டியிருக்கிறது. ஆனால் அவரை இந்த உலக கோப்பையில் கண்டிப்பாக மிஸ்செய்வோம் என்றார் ரோஹித்.
 

click me!