மகளிர் ஆசிய கோப்பை: ஃபைனலில் இலங்கையை வீழ்த்தி 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

By karthikeyan VFirst Published Oct 15, 2022, 3:44 PM IST
Highlights

மகளிர் ஆசிய கோப்பை ஃபைனலில் இலங்கையை வெறும் 65 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 66 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசிய கோப்பையை 7வது முறையாக வென்றது.
 

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்தது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின. சில்ஹெட்டில் இன்று ஃபைனல் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தயாளன் ஹேமலதா, ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்ட்ராகர், ஸ்னே ராணா, ரேணுகா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட்.

இதையும் படிங்க - அரியலூர் கொலை சம்பவத்துக்கு காரணம் கோலியா..? கோலியை கைது பண்ணுங்க.. கொந்தளிக்கும் ரோஹித் ரசிகர்கள்

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் வீராங்கனைகள் அனைவரும் தொடக்கம் முதலே படுமோசமாக ஆடி விக்கெட்டுகளை இழந்தனர். இலங்கை அணியில் 10ம் வரிசையில் இறங்கிய ரணவீரா என்ற வீராங்கனை தான் அதிகபட்சமாக 18 ரன்கள் அடித்தார். ரணசிங்கே 13 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ ஆட்டமிழந்ததையடுத்து, இலங்கை அணி 20 ஓவரில் வெறும் 65 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடியை எப்படி ஆடவேண்டும்..? இந்திய வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை

66 ரன்கள் என்ற ஒன்றுமே இல்லாத இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அடித்து ஆடி 25 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 51 ரன்களை விளாச, 9வது ஓவரில் இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, 7வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்தது.
 

click me!