இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா டாஸ் என்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியை பொறுத்த வரையில் சர்ஃபரான் கான் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டனர்.
Sarfaraz Khan: பெற்றோருக்கு பெருமை சேர்த்த சர்ஃபராஸ் கான் – வைரலாகும் வீடியோ!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் ரஜத் படிதார் 5 ரன்களில் நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்தது.
அறிமுக போட்டியிலேயே மோசமான சாதனை - முதலிடம் பிடித்த சர்ஃபராஸ் கான்!
தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து விக்கெட்டை கட்டுப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தை நிறைவு செய்தார். கடைசியாக 196 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு சர்ஃபராஸ் கான் களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
IPL 2024: இந்தியாவில் தான், மார்ச் இறுதியில் ஐபிஎல் 2024 நடைபெறும் - அருண் சிங் துமால் உறுதி!
தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 66 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்திருந்தது. இதில் ஜடேஜா 110 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் 2ஆம் நாளான இன்று கூடுதலாக 2 ரன்கள் சேர்த்த நிலையில், 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்களில் வெளியேற ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் துருவ் ஜூரெல் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.
India vs England 3rd Test: 16ஆவது இங்கிலாந்து வீரராக 100ஆவது டெஸ்ட்டில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்!
அஸ்வின் 37 ரன்களில் வெளியேற, ஜூரெல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். கடைசியாக ஜஸ்ப்ரித் பும்ரா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக இந்தியா 130.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரெஹான் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார். டாம் ஹார்ட்லி, ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.