இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரஜ்த் படிதார் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். மேலும், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக தோல்வி - பிளே ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் முன்னேறுமா?
இதே போன்று இங்கிலாந்து அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஜாக் லீச் மற்றும் மார்க் வுட் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சோயிப் பசீர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக முதல் இன்னிங்ஸை தொடங்கினர்.
இதில், ரோகித் சர்மா ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 41 பந்துகள் பிடித்து 14 ரன்கள் மட்டுமே எடுத்து சோயிப் பசீர் பந்தில் ஆலி போப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் வந்த வேகத்தில் 5 பவுண்டரி அடித்து 46 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பர் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தன் பங்கிற்கு 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 92 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். உணவு இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களுடன் விளையாடி வருகிறார்.