ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தொடர்ந்து 3ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா 3ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா, ஜெய் ஷா தான் தலைவராக வேண்டும் என்று முன் மொழிந்தார். இதையடுத்து மற்ற உறுப்பு நாடுகளும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
ரிங்கு சிங்கிற்கு ஜாக்பாட் – ரூ.3 கோடி பரிசு தொகை அறிவிப்பு, 3 கோடியை என்ன செய்ய போகிறார் தெரியுமா?
பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, பிசிசியின் தலைவராக வேண்டும் என்றால், செயலாளர் பதவி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆதலால், அவர் பிசிசிஐ தலைவர் பதவி வேண்டாமே வேண்டாம் என்ற முடிவோடு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு 8ஆவது இடம்; இந்த ஆண்டு 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு 2ஆவது இடம் பிடித்து சாதனை!
ஆசிய கோப்பை தொடரானது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் மூலமாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே 2 முறை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த ஜெய் ஷா தலைமையில் 2022ல் டி20 ஆசிய கோப்பை தொடரும், 2023ல் ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 3ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய் ஷா தலைமையில் டி20 ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது. ஆனால், அது எப்போது நடக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
எனினும், ஆசிய கோப்பை டி20 தொடரை ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் நடத்த தயாராக இருப்பதாகவும், மற்ற நாடுகளும் போட்டி போடுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தாயார் நலமாக இருக்கிறார் – பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் – விராட் கோலியின் சகோதரர்!