தாயார் நலமாக இருக்கிறார் – பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் – விராட் கோலியின் சகோதரர்!

By Rsiva kumar  |  First Published Jan 31, 2024, 2:26 PM IST

தனது தாயார் உடல்நிலை குறித்து பொய்யான செய்தி பரவிய நிலையில், தாயார் நலமுடன் இருக்கிறார் என்றும், பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலியின் சகோதர் விகாஸ் கோலி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக விலகினார். இந்த நிலையில் தான் விராட் கோலியின் தாயர் சரோஜ் கோலியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியானது.

கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் தனது தேசிய சாதனையை தானே முறியடித்து தங்கம் வென்ற பாலக் ஜோஷி!

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக விராட் கோலியின் மூத்த சகோதரர் விகாஸ் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: எங்கள் அம்மாவின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகள் பரவி வருவதை நான் கவனித்தேன். தாயார் நலமுடன் தான் இருக்கிறார். இது போன்ற செய்திகளை முறையான ஆதாரம் இல்லாமல் பரப்ப வேண்டாம் என்று அனைவரையும், ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Khelo India: இன்றுடன் முடிவடையும் கேலோ இந்தியா – தமிழ்நாடு 91 பதக்கத்துடன் 3 ஆவது இடத்திற்கு சரிவு!

விராட் கோலி தனது தாயார் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தான் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Virat Kohli's brother post on fake news circulating around their mother's health. pic.twitter.com/IFLAsvNRa1

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!