இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில்லை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாபர் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஆலி போப் 196 ரன்கள் குவித்தார். பந்து வீச்சில் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்த இந்திய அணியால் வெற்றி இலக்கான 231 ரன்கள் எடுக்க முடியாமல் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
விக்கெட்டே எடுக்காத சிராஜை தூக்கிட்டு குல்தீப் யாதவ்வை உள்ள இறக்குங்க – பார்த்தீவ் படேல்!
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனது இடத்தை சுப்மன் கில்லிற்கு கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாபர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சில டெஸ்ட் போட்டிகளாகவே சுப்மன் கில் சொதப்பி வரும் நிலையில், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால், அவரை நீக்குவதற்கு பதிலாக 3ஆவது இடத்தில் களமிறங்கும் அவரை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெய்ஸ்வால் மற்றும் கில் காம்போ சிறப்பாக இருக்கும் என்றும், ரோகித் சர்மா 3ஆவதாக களமிறங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏனென்றால், ரோகித் சர்மா சுழல் பந்தில் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஆதலால், அவர் 3ஆவது வரிசையில் களமிறங்கலாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே விராட் கோலியும் இல்லை. இப்போது கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.