வேதிப்பொருள் கலந்த தண்ணீரை குடித்த நிலையில், தொண்டை எரிந்து, வாந்தி எடுத்த நிலையில் மயக்கம் அடைந்த மாயங்க் அகர்வால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று டிஸ்ஜார்ட் செய்யப்படுகிறார்.Cri
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மாயங்க் அகர்வால். கடந்த 2018 ஆம் ஆண்டும் முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அகர்வால் 1429 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் இடம் பெற்று 86 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் தான் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். இதில், திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய நிலையில், சக வீரர்களுடன் இணைந்து அடுத்த போட்டிக்காக அகர்தலாவிலிருந்து சூரத் செல்வதற்கு விமானத்தில் ஏறி தனது இருக்கைக்கு சென்றுள்ளார். அங்கு தனது இருக்கைக்கு முன் இருந்த பையில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்திருக்கிறார்.
Ravindra Jadeja Injury: சீரியசாக பாதிக்கப்பட்ட ஜடேஜா – எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பது டவுட் தான்!
ஆனால், அது தண்ணீர் இல்லை என்பதை அறிந்து கீழே துப்பி இருக்கிறார். எனினும், அவரது தொண்டை எரிந்துள்ளது, வாந்தியும் எடுத்துள்ளார். அதன் பிறகு தொண்டையில் வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து இன்று அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட உள்ளார்.
இந்த நிலையில் தான் மாயங்க் அகர்வால் குடித்தது தண்ணீர் இல்லையாம், அது ஆசிட் பாட்டில் என்று தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாயங்க் அகர்வால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.