இந்திய பேட்ஸ்மேன்களின் உண்மையான பிரச்னையை ஒப்புக்கொள்ள மறுக்கும் ரோஹித் சர்மா..!

By karthikeyan VFirst Published Mar 20, 2023, 2:57 PM IST
Highlights

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக எந்த பிரச்னையும் இல்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு புதிய பந்தில் இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக ஒரு பிரச்னை இருக்கிறது என்பதை தொடர்ச்சியாக பார்த்துவருகிறோம். குறிப்பாக ரோஹித் சர்மா, ராகுல், கோலி ஆகிய முக்கியமான வீரர்கள் உலகின் முன்னணி இடது கை ஃபாஸ்ட் பவுலர்களிடம் இன்னிங்ஸின் தொடக்கத்தில் விக்கெட்டை பலமுறை பறிகொடுத்திருக்கின்றனர்.

பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகிய தரமான மற்றும் பந்தை ஸ்விங் செய்யும் மிரட்டலான இடது கை ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் திணறியிருக்கின்றனர் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா அபார சாதனை..! சச்சின், கபில் தேவுடன் இணைந்தார் ஜடேஜா

அது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் எதிரொலிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை 117 ரன்களுக்கு சுருட்ட உதவினார்.

ஷுப்மன் கில் (0), ரோஹித் சர்மா(13), சூர்யகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல் (9) ஆகிய 4 பெரிய பேட்ஸ்மேன்களையும் மிட்செல் ஸ்டார்க் தான் வீழ்த்தினார். புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடிய இடது கை ஃபாஸ்ட் பவுலரான மிட்செல் ஸ்டார்க்கிடம் இந்திய வீரர்கள் சரணடைந்தனர். புதிய பந்தில் ஸ்விங் செய்யும் இடது கை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பிரச்னை இருப்பது உண்மை. அதை ஏற்றுக்கொண்டால் தான் சரி செய்துகொள்ள முடியும்.

ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டிக்கு பின் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, இந்த விஷயத்தை ஏற்க மறுத்தார். 

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எதிரணியில் இருக்கும் தரமான பவுலர், நம் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களை வீழ்த்த கடுமையாக முயற்சிப்பதுதான் வழக்கம். அதில் இடது கை பவுலர் - வலது கை பவுலர் என்ற பேதமெல்லாம் இல்லை. வலது கை ஃபாஸ்ட் பவுலர்களும் நமக்கு எதிராக அபாரமாக வீசி பிரச்னையை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. 

சச்சின், சேவாக், யுவராஜ் மாதிரி பிளேயர் அந்த பையன்..! உலக கோப்பையில் அவன் கண்டிப்பா ஆடணும்.. ரெய்னா அதிரடி

நாங்கள் இடது - வலது பேதமெல்லாம் பார்ப்பதில்லை. விக்கெட்டுகள் விக்கெட்டுகள் தான். விக்கெட்டுகளை விரைவில் இழப்பது கவலையளிக்கிறது. எல்லாவிதமான பிரச்னைகளிலும் கவனம் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக இருக்கும் பிரச்னைகளை எல்லாம் களைய வேண்டும். முந்தைய 6 ஒருநாள் போட்டிகளில் நமது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் செய்திருக்கின்றனர். எனவே உண்மையாகவே பிரச்னை இருக்கும்பட்சத்தில் அதை களைய நடவடிக்கைகள் எடுப்போம் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.
 

click me!