WI vs IND: பொறுப்புடன் ஆடிய இஷான் கிஷான்: வின்னிங் ஷாட் அடித்து கொடுத்த ரோகித் சர்மா; இந்தியா சிம்பிள் வெற்றி!

By Rsiva kumar  |  First Published Jul 27, 2023, 11:22 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிய வெற்றி பெற்றது.


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்றூ நடந்தது. இதில், இந்திய அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப் மட்டும் பொறுப்புடன் ஆடிய ரன்கள் சேர்த்தார். அவர் 43 ரன்களில் ஆட்டமிழந்தக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம்; இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் இல்லை: ஜெய்ஷா!

Tap to resize

Latest Videos

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

வெஸ்ட் இண்டீஸ்:

ஷாய் ஹோப் (கேப்டன் – விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவால், ரோமரியோ ஷெப்பர்டு, யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி

குல்தீப், ஜடேஜா சுழலில் 114 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்: பக்க பலமாக இருந்த ஹர்திக், முகேஷ், ஷர்துல்!

பந்து வீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகையும் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் 115 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி ஆடியது. இதில், தொடக்க வீரர்களில் இந்திய அணி சில மாற்றங்களை செய்தது. அதன்படி இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில்லை இந்திய அணி களமிறக்கியது. டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த சுப்மன் கில் இந்தப் போட்டியிலும் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

WI vs IND First ODI Live Score: சஞ்சு சாம்சனுடைய ஜெர்சியை அணிந்து வந்த சூர்யகுமார் யாதவ்!

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டி ஆடினார். அவர் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள பொறுப்புடன் ஆடிய தொடக்க வீரர் இஷான் கிஷான் அரை சதம் அடித்தார். அவர் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்கள் சேர்த்து தூக்கி அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷர்துல் தாக்கூர் 1 ரன்களில் ஆட்டமிழந்தார்.

திரும்ப வந்த ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பக்கா பிளான் போட்ட ரோகித் சர்மா: இந்தியா பீல்டிங் தேர்வு!

கடைசியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக இந்திய அணி 22. 5 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஸ்கோர் 114 ரன்களாக இருந்த போது ஒரு ரன் அடிப்பதற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா திணறிவந்தார். கடைசியாக பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி வரும் 29ஆம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

click me!