இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி தற்போது பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலமாக முதல் முறையாக இந்திய அணி டிரீம் 11 ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளது.
WI vs IND First ODI Live Score: சஞ்சு சாம்சனுடைய ஜெர்சியை அணிந்து வந்த சூர்யகுமார் யாதவ்!
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
வெஸ்ட் இண்டீஸ்:
ஷாய் ஹோப் (கேப்டன் – விக்கெட் கீப்பர்), கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரான் ஹெட்மயர், ரோவ்மன் பவால், ரோமரியோ ஷெப்பர்டு, யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினர். இதில், கைல் மேயர்ஸ் அடிக்க முயற்சித்து ஹர்திக் பாண்டியா ஓவரில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து வந்த அலிக் அதனாஸ் அதிரடியாக ஆடினார். பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அவர் 22 ரன்கள் எடுத்திருந்த போது இந்தப் போட்டியின் மூலமாக, ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமான முகேஷ் குமார் ஓவரில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது முகேஷ் குமாரின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் முதல் விக்கெட் ஆகும்.
திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
அடுத்து தொடக்க வீரரான பிராண்டன் கிங் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்கூர் ஓவரில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து ஷிம்ரான் ஹெட்மயர் 11 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் கிளீன் போல்டானார். பின் வரிசை வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை போராடிய கேப்டன் ஷாய் ஹோப் 43 ரன்களில் குல்தீப் யாதவ் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகையும் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!
What a catch by Virat Kohli.
- The GOAT in ODI.pic.twitter.com/ckq8PIpflS