இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி தற்போது கொழும்புவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத திருப்பத்தை முகமது சிராஜ் ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் ஏற்படுத்துவிட்டார். முதல் ஓவரிலேயே ஜஸ்ப்ரித் பும்ரா குசால் பெரேரா விக்கெட்டை கைப்பற்றினார்.
பின்னர் வந்த முகமது சிராஜ் அந்த ஓவரை மெய்டனாக வீசினார். மூன்றாவது ஓவரில் பும்ரா 1 ரன் மட்டுமே கொடுத்தார். பின்னர், 4ஆவது ஓவரை வீச வந்த சிராஜ், முதல் பந்திலேயே பதும் நிசாங்கா விக்கெட்டை கைப்பற்றினார். நிசாங்கா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2ஆவது பந்தில் ரன் எடுக்காத போது 3ஆவது பந்தில் சதீர சமரவிக்ரமா விக்கெட்டை கைப்பற்றினார். சமரவிக்ரமா ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
ஹாட்ரிக்கை தவறவிட்டு ஒரே ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த முகமது சிராஜ்!
இவரைத் தொடர்ந்து வந்த சரித் அசலங்கா ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த தனஞ்சயா டி சில்வா முதல் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில், அடுத்த பந்திலேயே கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ஒரே ஓவரில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதோடு முதல் முறையாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார்.
இதன் மூலமாக இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 5ஆவது ஓவரை பும்ரா மெய்டனாக வீசினார். அதன் பிறகு சிராஜ் 6ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில், 4ஆவது பந்தில் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவின் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலமாக 15 பந்துகளில் (கிரிக்பஸ்) 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். ஆனால், அவர் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்று ஹாட்ஸ்டாரில் தகவல் தெரிவிக்கப்பட்டதுஒரு கட்டத்தில் இலங்கை 6 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
Sri Lanka vs India: மழையால் போட்டி தாமதம்: இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!
அதன் பிறகு துனித் வெல்லலகே மற்றும் துஷான் குசால் மெண்டிஸ் இருவரும் இணைந்து 17 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். அப்போது, வந்த சிராஜ், மெண்டிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலமாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார்.
அதன் பிறகு ஹர்திக் பாண்டியா வந்து பந்து வீசினார். கடைசி 3 விக்கெட்டையும் ஹர்திக் பாண்டியா கைப்பற்றி அசத்தியுள்ளார். இறுதியாக இலங்கை 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக குறைந்த ரன்கள் எடுத்த மோசமான அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
பந்து வீச்சு தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளும், பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைந்து வெற்றி தேடிக் கொடுத்தனர். இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக இந்தியா 8ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது. இதில், 7 முறை ஒரு நாள் போட்டி டிராபியையும், ஒரு முறை டி20 போட்டி டிராபியையும் கைப்பற்றியுள்ளது.
Asia Cup Final: ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இணையும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!
மேலும், ரோகித் சர்மா தனது 250ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடி 2ஆவது முறையாக ஆசிய கோப்பை டிராபியை கைப்பற்றிக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக 2 முறை டிராபியை கைப்பற்றிய 3ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அதோடு ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவருக்கு டீம் இந்தியா இந்த வெற்றியை பரிசாக கொடுத்துள்ளது என்று கூட சொல்லலாம்.
Rohit Sharma becomes the 3rd Indian captain to win Asia Cup title twice.
- The Legend. pic.twitter.com/isiFHNN2tD