நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று புதிய சாதனை படத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் கடைசி மற்றும் 45ஆவது லீக் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 128* ரன்களும், கேஎல் ராகுல் 102 ரன்களும் எடுத்தனர், ரோகித் சர்மா 61, சுப்மன் கில் 51, விராட் கோலி 51 என்று ரன்கள் எடுத்தனர்.
9 ஆண்டுகளுக்கு பிறகு விக்கெட் கைப்பற்றிய விராட் கோலி – சந்தோஷத்தில் துள்ளி குதித்த அனுஷ்கா சர்மா!
பின்னர் கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் வெஸ்லி பாரேஸி 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கொலின் அக்கர்மேன் 35 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மேக்ஸ் ஓடவுட் 30 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸை 17 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்கச் செய்து ஒரு நாள் போட்டிகளில் தனது 5ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.
போதும் நீங்க விளையாடி கிழிச்சது – ஓரங்கப்பட்டப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்!
பாஸ் டி லீடை பும்ரா ஆட்டமிழக்கச் செய்தார். பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்த சைப்ரண்ட் ஏங்கல்ப்ரெக்ட் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார். அவர் 80 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். கடைசி வரை சிக்ஸராக விளாசிய தேஜா நிடமானுரு 39 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 54 ரன்கள் குவித்து ரோகித் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுத்து உதவிய ஆப்கன் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்!
இதன் மூலமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கேப்டனாக ரோகித் சர்மா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இறுதியாக நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில், விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே பந்து வீசவில்லை. ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இவர்களைத் தவிர விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா என்று மொத்தமாக 9 வீரர்கள் பந்து வீசியுள்ளனர். இதில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பந்து வீசி புதிய சாதனை படைத்துள்ளனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக விளையாடிய 9 லீக் போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்த சீசனில் டீம் இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்து மட்டுமே 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.