India vs Australia 5th T20I: கடைசி வரை போராடிய ஆஸ்திரேலியா; இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

By Rsiva kumar  |  First Published Dec 3, 2023, 11:39 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் இன்று நடந்தது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்யவே, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் எடுத்தார்.

தன்னை கிரிக்கெட் வீரனாக்கிய குழந்தைப்பருவ ஆசானை நினைவு கூர்ந்த சச்சின் டெண்டுல்கர்!

Tap to resize

Latest Videos

பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு ஜோஷ் பிலிப் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் ரவி பிஷ்னோஷ் பந்தில் கிளீன் போல்டானார். ஹெட் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்த தொடரில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், தொடர்ந்து 5 போட்டிகளிலும் முதல் ஓவரிலேயே விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.

இவரைத் தொடர்ந்து வந்த ஆரோன் ஹார்டி 6, டிம் டேவிட் 17 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் அதிரடியாக விளையாடிய பென் மெக்டெர்மட் 36 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 5 சிக்ஸ் அடித்து 54 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.

IND vs AUS 5th T20I: ஏமாற்றிய ரிங்கு, அதிரடி காட்சிய ஷ்ரேயாஸ், ஜித்தேஷ் சர்மா – இந்தியா 160 ரன்கள் குவிப்பு!

மேத்யூ ஷார்ட் 16 ரன்களில் வெளியேற, கடைசியாக வந்த கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவையிருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 4-1 என்று கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 19ஆவது வெற்றியை இந்தியா பெற்றுள்ளது. மேலும், முதல் முறையாக இந்திய அணிக்கு டி20 தொடருக்கு கேப்டனாக பொறுப்பேற்ற சூர்யகுமார் யாதவ் தொடரை வென்று கொடுத்துள்ளார். இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அக்‌ஷர் படேல் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரில் 9 விக்கெட் கைப்பற்றிய ரவி பிஷ்னோய் தொடர் நாயகன் விருது வென்றார்.

IND vs AUS T20I:3ஆவது இந்திய வீரராக ருதுராஜ் சாதனை – 9 ரன்களில் கோலி சாதனையை கோட்டைவிட்ட கெய்க்வாட்!

click me!