இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் 8ஆவது முறையாக மோதுகின்றன.
கிரிக்கெட் உலகக் கோப்பையின் 12ஆவது லீக் போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் மூலமாக இரு அணிகளும் 8ஆவது முறையாக பலப்பரீட்சை நடத்துகின்றன.
India vs Pakistan உலகக் கோப்பை போட்டிக்காக அகமதாபாத்தில் 11000க்கும் அதிகமான போலீசார் குவிப்பு!
ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் டெங்கு பாதிப்பால் இடம் பெறாத சுப்மன் கில் இந்தப் போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில் இன்றைய போட்டியில் இடம் பெற்றால் இஷான் கிஷான் நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு மீண்டும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதுவரையில் சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பையில் போட்டியில் விளையாடாத நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ்விற்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
உலகக் கோப்பையில் புற்றுநோயுடன் விளையாடியதாக சுப்மன் கில்லிடம் சொன்னேன் – யுவராஜ் சிங்!
இதுவரையில் ஒரு நாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா தான் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் மூலமாக உலகக் கோப்பையில் 8ஆவது போட்டியில் மோதுகின்றன. இதே போன்று இரு அணிகளும் 134 ஒரு நாள் ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் 73 போட்டியிலும், இந்தியா 56 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகளுக்கு முடிவு எட்டவில்லை.
இரு அணிகளும் இந்தியாவில் 30 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பாகிஸ்தான் 19 போட்டியிலும், இந்தியா 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் இந்தியா 4ல் வெற்றி பெற்றிருக்கிறது. இதில், ஒரு போட்டிக்கு முடிவு எட்டவில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள்:
1992 - இந்தியா 216/7 (49) பாகிஸ்தான் – 173/10 (48.1) – சிட்னி
1996 – இந்தியா 287/8 (50) பாகிஸ்தான் - 248/9 (49) – பெங்களூரு
1999 – இந்தியா 227/6 (50) பாகிஸ்தான் – 180/10 (45.3) – மான்செஸ்டர்
2003 – பாகிஸ்தான் 273/7 (50) இந்தியா – 276/4 (45.4) – செஞ்சூரியன்
2011 – இந்தியா 260/9 (50) பாகிஸ்தான் – 231/10 (49.5) – மொகாலி
2015 – இந்தியா 300/7 (50) பாகிஸ்தான் – 224/10 (47) – அடிலெய்டு
2019 – இந்தியா 336/5 (50) பாகிஸ்தான் – 212/6 (40) – இங்கிலாந்து
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி 2 போட்டிளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். மேலும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கின்றனர்.
இதே போன்று பாகிஸ்தான் அணியும் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், கடைசியாக விளையாடிய இலங்கைக்கு எதிரான போட்டியில் 344 ரன்களை சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.
2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!
இந்தியா பிளேயிங் 11:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான் பிளேயிங் 11:
அப்துல்லா ஷாபீக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் சகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாகீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப்.
New Zealand vs Bangladesh: திரும்ப வந்த கேன் வில்லியம்சன் – டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு!