இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நாளை நடக்க உள்ள போட்டிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலகக் கோப்பைக்கான 12 ஆவது லீக் போட்டி நாளை 14 ஆம் தேதி நடக்கிறது. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடுகிறது. மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்றால் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.
ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது இந்த ஒரு போட்டிக்காகத்தான் என்று சொன்னால் மிகையாகாது. இதுவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு நாள் உலகக் கோப்பையில் 7 முறை மோதியுள்ளன. இதில், 7 போட்டியிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், இரு அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 134 போட்டிகளில் மோதியுள்ளன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதில், இந்தியா 56 போட்டியிலும், பாகிஸ்தான் 73 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை விளையாட்டு போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 2 விக்கெட் இழந்து 356 ரன்கள் குவித்தது. இதில், பாகிஸ்தான் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டாகவே, இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
LA 2028: 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை நடக்க உள்ள 12 ஆவது லீக் போட்டியின் மூலமாக முதல் முறையாக அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியை முன்னிட்டு கிட்டத்தட்ட 11000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்றனர். போட்டிக்கு முன்னதாக பிற்பகல் 12.30 மணியளவில் சங்கர் மகாதேவர், அரிஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோரது இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.
IND vs PAK: சுப்மன் கில் விளையாடுவது 99 சதவிகிதம் உறுதி, ஒரு சதவிகிதம் வாய்ப்பில்லை - ரோகித் சர்மா!
இந்த நிலையில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத்தில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அதிக விமான டிக்கெட் மற்றும் தங்கும் விடுதியின் கூடுதல் கட்டணம் ஆகியவற்றின் பாதிப்பு காரணமாக ரசிகர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அகமதாபாத்திற்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
India vs Pakistan உலகக் கோப்பை போட்டிக்காக அகமதாபாத்தில் 11000க்கும் அதிகமான போலீசார் குவிப்பு!
இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவையானது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும். மேலும் இது நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள சபர்மதி மற்றும் அகமதாபாத்தில் நிறுத்தப்படும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த வந்தே பாரத் ரயிலானது சிட்டிக்கு வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று போட்டி முடிந்ததும் ரசிகர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையிலும் இந்த வந்தே பாரத் ரயில் சேவை இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகக் கோப்பையில் புற்றுநோயுடன் விளையாடியதாக சுப்மன் கில்லிடம் சொன்னேன் – யுவராஜ் சிங்!