நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 11ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 11 ஆவது லீக் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் முதல் ஓவரின் முதல் பந்திலேயே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் தன்ஷித் அகமது 16 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த மெஹிடி ஹசன் மிராஸ் 30 ரன்களில் ஆட்டமிழக்க, நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
LA 2028: 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 4 விக்கெட்டிற்கு 56 ரன்கள் எடுத்து தடுமாறியது. அப்போது தான், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 5ஆவது விக்கெட்டிற்கு 96 ரன்கள் குவித்தது. இதில் ஷாகிப் அல் ஹசன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு முஷ்பிகுர் ரஹீம் 75 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த தவ்ஹீத் ஹிரிடோய் 13 ரன்னிலும், தஸ்கின் அகமது 17 ரன்னிலும், முஷ்டபிஜூர் ரஹ்மான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக மஹ்முதுல்லா ரியாத் 41 ரன்கள் எடுக்க வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
India vs Pakistan உலகக் கோப்பை போட்டிக்காக அகமதாபாத்தில் 11000க்கும் அதிகமான போலீசார் குவிப்பு!
இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 107 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், 55 டி20 போட்டிகளில் 74 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 78 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டிரெண்ட் போல்ட் 317 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதற்கு முன்னதாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:
102 போட்டிகள் – மிட்செல் ஸ்டார்க்
104 – சாக்லின் முஷ்டாக்
107 – டிரெண்ட் போல்ட்
112 – பிரெட் லீ
117 – அல்லான் டொனால்டு
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் லாக்கி ஃபெர்குசன் 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!