வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை, தடகளம், துப்பாக்கிச்சுடுதல், நீச்சல், ஈட்டி எறிதல், ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் என்று பல விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில், கடந்த 1900 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு ஒரே ஒரு போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இதில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. எனினும், இந்தப் போட்டியை இரு நாடுகளும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
India vs Pakistan உலகக் கோப்பை போட்டிக்காக அகமதாபாத்தில் 11000க்கும் அதிகமான போலீசார் குவிப்பு!
இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் அறிமுகம் செய்ய பிசிசிஐ தீவிரமாக இறங்கியது. இந்த நிலையில் தான், மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. அதில் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட், ஸ்குவாஷ், பிளாக் கால்பந்து, லாக்ரோக்ஸ், பேஸ்பால், ஆகிய 5 போட்டிகளை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
உலகக் கோப்பையில் புற்றுநோயுடன் விளையாடியதாக சுப்மன் கில்லிடம் சொன்னேன் – யுவராஜ் சிங்!
ஆசிய விளையாட்டு விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக தங்கம் கைப்பற்றியது. இதே போன்று ஒலிம்பிக் போட்டியிலும் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிரிக்கெட் தொடரானது டி20 போட்டியாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும், ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இந்த ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும். வரும் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமை மட்டும் ரூ.165 கோடி. இதுவே ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை மட்டும் சேர்த்துவிட்டால் இந்த தொகையானது வரும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ரூ.1585 கோடியாக உயர்த்தப்படும்.
2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!