உலகக் கோப்பையில் புற்றுநோயுடன் விளையாடியதாக சுப்மன் கில்லிடம் சொன்னேன் – யுவராஜ் சிங்!

By Rsiva kumar  |  First Published Oct 13, 2023, 3:33 PM IST

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புற்றுநோயுடன் விளையாடியதாக நான் சுப்மன் கில்லிடம் சொன்னேன், ஆகையால், அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவார் என்று நம்புகிறேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.


ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இதையடுத்து நாளை 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இந்தியா உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்காமல் இருந்துள்ளது.

New Zealand vs Bangladesh: திரும்ப வந்த கேன் வில்லியம்சன் – டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு!

Tap to resize

Latest Videos

ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் டெங்கு காய்ச்சல் காரணமாக இடம் பெறாத சுப்மன் கில் பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத் புறப்பட்டு வந்துள்ளார். மேலும், அவர் பயிற்சி மேற்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுவரையில் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சுப்மன் கில் ஏராளமான ரன்களை குவித்துள்ளார். எனவே இந்தப் போட்டியில் எப்படியும் சுப்மன் கில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் புற்றுநோயுடன் விளையாடியது போன்று உங்களால் இந்தப் போட்டியில் சாதிக்க முடியும் என்று சுப்மன் கில் பேசியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இப்படிப்பட்ட சூழலில் விளையாடுவது கடினமானதாக இருந்தாலும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் விளையாடு வாய்ப்பை தவற விடாதீர்கள் என்று சுப்மன் கில்லிடம் கூறியதாக யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஆகையால், சுப்மன் கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவார் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023ல் உலகக் கோப்பையில் 2ஆவது முறையாக குறைவான ரன்னுக்கு ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா!

 

Yuvraj Singh said, "I've solidly built Shubman Gill. I've told him that I've played matches dengue and the World Cup with cancer. Hopefully he'll be perfectly fine for the match against Pakistan". (ANI). pic.twitter.com/Q5KqGW9Mdv

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!