வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 11ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசியது. அதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் 66 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 40 ரன்களும் எடுக்கவே வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
World Cup 2023 India vs Pakistan போட்டிக்காக அகமதாபாத்தில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்!
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். டெவான் கான்வே நிதானமாக விளையாடி 45 ரன்கள் குவித்தார். இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஒரு புறம் வில்லியம்சன் 6 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்ப வந்து அரைசதம் அடித்துள்ளார். மேலும், அனைத்து பார்மேட்டுகளிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் வில்லியம்சன் 134 முறை எடுத்து முதலிடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் ராஸ் டெய்லர் இருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒரு கட்டத்தில் வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்த நிலையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலிருந்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன் பிறகு கிளென் பிலிப்ஸ் களமிறங்கினார். ஒரு புறம் மிட்செல் தொடர்ந்து விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இதன் மூலமாக நியூசிலாந்து 42.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
LA 2028: 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்த வெற்றியின் மூலமாக மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 2 ஆவது இடத்திலும், இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்த வெற்றியின் மூலமாக உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக நியூசிலாந்து தொடர்ந்து 6ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
IND vs PAK: சுப்மன் கில் விளையாடுவது 99 சதவிகிதம் உறுதி, ஒரு சதவிகிதம் வாய்ப்பில்லை - ரோகித் சர்மா!