இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இன்றைய உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்தும், 2ஆவது போட்டியில் பாகிஸ்தானும், 3ஆவது போட்டியில் வங்கதேசமும், 4ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்க இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
ஏற்கனவே சுப்மன் கில் டெங்கு பாதிப்பால் மருத்துவ பரிசோதனையில் இருக்கும் நிலையில், அவர் இந்தப் போட்டியில் இடம் பெறமாட்டார் என்று கூறப்படுகிறது. ஆதலால், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா தனது 3ஆவது உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.
முதல் முறையாக ஒரு கேப்டனாக இன்றைய உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் 6 சதங்கள் இணைந்துள்ளார். இந்தியா 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய சிறப்பு வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். கடந்த மாதம் நடந்த ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
உலகக் கோப்பைக்கு மெட்ரோவில் இலவச பயணம்: ஆனால், இது கண்டிப்பா இருக்கணும்?
ஆனால், கடந்த மார்ச் மாதம் நடந்த 3 ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரையில் இரு அணிகளும் 149 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 56 போட்டிகளில் இந்தியாவும், 83 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் 150ஆவது போட்டியில் உலகக் கோப்பையில் விளையாடுகின்றன. இதுவரையில் இரு அணிகளும் மோதிய 12 உலகக் கோப்பை போட்டிகளில் 4ல் இந்தியாவும், 8ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு (316 ரன்கள்) எதிரான போட்டியில் இந்தியா (352 ரன்கள்) 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
RSA vs SL: உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா படைத்த சாதனைகளின் பட்டியல் – 100, 108, 106 ரன்கள்!
சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானம்:
இதுவரையில் 34 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 17 போட்டிகளிலும், 2ஆவதாக பேட்டிங் ஆடிய அணியானது, 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 224 ரன்கள். ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 205 ரன்கள். அதிகபட்ச ஸ்கோர் 337/7, குறைந்தபட்ச ஸ்கோர் 69/10. சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 291/2, குறைந்தபட்ச ஸ்கோர் எடுத்து வெற்றி 171/10.
எதிர்பார்ப்பு:
அதிக ரன்கள் எடுக்கும் வீரர் – ரோகித் சர்மா அல்லது விராட் கோலி
அதிக விக்கெட் எடுக்கும் வீரர் – ஜஸ்ப்ரித் பும்ரா அல்லது குல்தீப் யாதவ்
ஆஸ்திரேலியா அணியில் அதிக விக்கெட் கைப்பற்றும் வீரர் – ஆடம் ஜம்பா அல்லது மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலியா அணியில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர் – டேவிட் வார்னர் அல்லது ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான 5ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.