தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 326 ரன்கள் மட்டுமே எடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை 4ஆவது லீக் போட்டி டெல்லியில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 428 ரன்கள் குவித்தது. இதில், குயிண்டன் டி காக் 100, ரஸ்ஸி வான் டெர் டூசென் 108 மற்றும் எய்டன் மார்க்ரம் 106 என்று வரிசையாக தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சதம் விளாசினர்.
உலகக் கோப்பைக்கு மெட்ரோவில் இலவச பயணம்: ஆனால், இது கண்டிப்பா இருக்கணும்?
இதையடுத்து கடின இலக்கை நோக்கி இலங்கை பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர் பதும் நிசாங்கா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் பெரேரா ஆரம்பத்திலிருந்து திணறி வந்த நிலையில், 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதையடுத்து சதீர சமரவிக்ரமா களமிறங்கினார். இதில் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். எனினும், அவர் 42 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 76 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். சமரவிக்ரமா 23 ரன்களில் வெளியேறினார்.
RSA vs SL: உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா படைத்த சாதனைகளின் பட்டியல் – 100, 108, 106 ரன்கள்!
இதையடுத்து சரித் அசலங்கா மற்றும் தனஞ்செயா டி சில்வா இருவரும் இணைந்து ரன்கள் சேர்க்க தொடங்கினர். எனினும் சில்வா 11 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த துணித் வெல்லலகே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனாகா தன் பங்கிற்கு ஒரு நாள் போட்டியில் 4ஆவது அரைசதம் அடித்தார். அவர் 62 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 68 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் கசுன் ரஜிதா தன் பங்கிற்கு 31 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிக்கு எதிராக உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்திருந்தது. 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியானது டையானது. அடுத்து நடந்த 2007, 2015, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று வருகிறது.