உலகக் கோப்பைக்கு மெட்ரோவில் இலவச பயணம்: ஆனால், இது கண்டிப்பா இருக்கணும்?

By Rsiva kumar  |  First Published Oct 7, 2023, 10:24 PM IST

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், ரசிகர்கள் இல்லாமல் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படும் நிலை தான் இந்த ஆண்டு நடந்துள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த அகமதாபாத் மற்றும் ஹைதராபாத் மைதானங்களில் போட்டியின் போது இருக்கைகள் காலியாகவே இருந்தன.

RSA vs SL: உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா படைத்த சாதனைகளின் பட்டியல் – 100, 108, 106 ரன்கள்!

Tap to resize

Latest Videos

இதே நிலை தான் தரமசாலா மைதானத்திலும் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த 3ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 4ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் எடுத்து உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 2 மணிக்கு உலகக் கோப்பை 8ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்தப் போட்டிக்காக போலீஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

South Africa vs Sri Lanka, Aiden Markram: உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் விளாசி சாதனை படைத்த மார்க்ரம்!

இந்தியா உள்ளிட்ட மற்ற அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்காக இந்தியா உள்பட மற்ற அணிகள் விளையாடும் போட்டிக்காக நாளை 8 ஆம் தேதி, 13 ஆம் தேதி, 23 மற்றும் 27 ஆம் தேதிகளில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 8 – இந்தியா – ஆஸ்திரேலியா – சென்னை – பிற்பகல் 2 மணி

அக்டோபர் 13 – நியூசிலாந்து – வங்கதேம் – சென்னை – பிற்பகல் 2 மணி

அக்டோபர் 23 – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் – சென்னை – பிற்பகல் 2 மணி

அக்டோபர் 27 – பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா – சென்னை – பிற்பகல் 2 மணி

RSA vs SL, 3rd Match: உலகக் கோப்பை வரலாற்றில் முத்திரை பதித்த தென் ஆப்பிரிக்கா – 428 ரன்கள் குவித்து சாதனை!

இது ஒரு புறம் இருக்க, சென்னையில் நடைபெறும் போட்டியை பார்க்க வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிறுவனமும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் இணைந்து இலவச மெட்ரோ ரயில் பயணத்திற்கு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. Book My Showல் டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் மெட்ரோ ரயில் கவுண்டரில் டிக்கெட்டை பெற்று இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு கண்டிஷன், அதாவது, போட்டியை காண வரும் ரசிகர்கள் போட்டி முடிந்து திரும்பும் போது சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்க முடியும்.

Hangzhou Asian Games 2023: 4 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி – கபடியில் இந்திய அணிக்கு தங்கம்!

போட்டி முடிந்த பிறகு அரசினர் தோட்டம் Government Estate Metro மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், அரசினர் தோட்டம் வருவதற்கான டிக்கெட்டை ரசிகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிக்காக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. வரும் 14 ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு அருகாமையிலுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

மழையால் போட்டி ரத்து – இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு – ஆண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு தங்கம்!

click me!