ஒரு கையில் மைக், ஒரு கையில் பேட், மைதானத்திற்கு வந்த நடிகர் நானி; வேடிக்கை பார்த்த சுனில் கவாஸ்கர்!

Published : Mar 19, 2023, 04:29 PM IST
ஒரு கையில் மைக், ஒரு கையில் பேட், மைதானத்திற்கு வந்த நடிகர் நானி; வேடிக்கை பார்த்த சுனில் கவாஸ்கர்!

சுருக்கம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டியின் போது நடிகர் நானி தனது தசரா பட புரோமோஷனுக்காக வருகை தந்துள்ளார்.  

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் நானி. தற்போது, அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் உருவாகியுள்ள தசரா என்ற படத்தில் நானி நடித்துள்ளார். இதில், நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரும் 30ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டிக்கு நானி தனது படம் புரோமோஷனுக்காக வருகை தந்துள்ளார்.

பறவை போல பறந்த ஸ்டீவ் ஸ்மித் - ஹர்திக் பாண்டியாவை கெட்ச் போட்டு தூக்கிய ஆஸ்திரேலியா!

ஒரு கையில் மைக், ஒரு கையில் பேட் வைத்துக் கொண்டு மைதானத்திற்குள் வந்துள்ளார். அப்போது அவரிடம் கிரிக்கெட் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதில், தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா என்று பதிலளித்துள்ளார். அப்போது அவருக்கு பின்புறம் இருந்த கிரிக்கெட் வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர், அவரிடம் கலந்துரையாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வந்தாரு, நின்னாரு, சென்றாரு, ரிபீட்டூ, வந்தாரு, நின்னாரு, சென்றாரு ரிபீட்டூ - சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக்!

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில், தொடர்ந்து 2 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் கோல்டன் டன் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிகபட்சமாக விராட் கோலி 31 ரன்களும், அக்‌ஷர் படேல் 29 ரன்களும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார் 5 விக்கெட்டுகளும், சீன் அபாட் 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 118 ரன்களை வெற்றி இலக்காகக  கொண்ட ஆஸ்திரேலியா அணி களமிறங்க இருக்கிறது.

Asian Race Walking Championships - 20 கி.மீ பிரிவில் அக்‌ஷ்தீப் சிங் தங்கம், பிரியங்கா வெண்கலம் வென்று சாதனை!

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!