சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து நடக்கவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதையடுத்து மற்ற அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பு பெற போட்டி போட்டு வருகின்றன.
சரவெடியாக வெடித்த விராட் கோலி அண்ட் ப்ளெசிஸ்; கொண்டாடும் ஆர்சிபி பிளேயர்ஸ்!
இதையடுத்து ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய ஆர்சிபிக்கு விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதில் ஃபாப் டூப்ளெசிஸ் 71 ரன்கள் எடுத்தார். ஒருபுறம் அதிரடியாக ஆட 4 சிக்ஸர்கள், 12 பவுண்டர்கள் உள்பட 100 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விளம்பர விதிகளை மீறும் பிரபலங்களின் பட்டியலில் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி முதலிடம்!
அதோடு, புள்ளிப்பட்டியலிலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகள் உடன் 4ஆவது இடத்தில் இருந்த மும்பை தற்போது 5ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. மும்பையின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வரும் 21 ஆம் தேதி நடக்கவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பான முறையில் அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும்.
சதத்தையும், வெற்றியையும் கோட்டைவிட்ட லிவிங்ஸ்டன்; பஞ்சாப்புக்கு ஆப்பு வச்ச டெல்லி!
ஆனால் பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள கடைசி ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆர்சிபி வீழ்த்தினால் மும்பை இந்த தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை கடைசி போட்டியில் மும்பை மற்றும் ஆர்சிபி இரு அணிகளுமே தோல்வி அடைந்தால் ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னர்!