சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 49ஆவது போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதுவரையில் சென்னைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.
கேஎல் ராகுல் விலகல் - WTC Final ரேஸில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா?
கடந்த 2012, 2013, 2015, 2019, 2019 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் தான் வெற்றி கண்டுள்ளது. கடந்த 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சென்னை தான் வெற்றி பெற்றிருக்கிறது. சென்னையில் நடந்த போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி வெற்றி பெற்று 12 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த சீசனில் மும்பைக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதுவரையில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 2ஆவது இடத்திற்கு செல்லும். பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு எஞ்சிய 4 போட்டிகளில் சென்னை வெற்றி பெற வேண்டும். அதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் 2ஆவது இடத்திற்கு முன்னேறும். எஞ்சிய 5 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடிப்பதோடு பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக செல்லும்.
இல்லையென்றால், மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் மும்பைக்கு பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அமையும். ஏனென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்த்கது. லக்னோவிற்கு எதிராக கடைசியாக நடந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னைக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் இன்று சென்னையை எதிர்கொள்கிறது. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிய 35 போட்டிகளில் 20 முறை மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
6ஆவது முறையாக வெற்றி பெறுமா மும்பை? எல்லாமே சிஎஸ்கேவுக்கு பாதகம் தான்!
அதிகபட்சமாக சென்னை அடித்த 218 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டி வெற்றி பெற்றிருக்கிறது. குறைந்தபட்சமாக சென்னை அணி 79 ரன்களும், மும்பை இந்தியன்ஸ் 136 ரன்களும் எடுத்துள்ளன. இதுவரையில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில் முதல் 2 போட்டிகளில் சென்னை அணியும், கடைசியாக நடந்த 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் தான் வெற்றி பெற்றுள்ளது.
இதுவரையில் சென்னையில் நடந்த 60 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 43 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 17 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த சீசனில் நடந்த 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதோடு, முதலில் பேட்டிங் செய்த அணி 2 முறையும், 2ஆவது பேட்டிங் ஆடிய அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆகையால், இன்று நடக்கும் போட்டியில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
CSK vs MI; மகுடம் சூடுமா சிஎஸ்கே; இன்று நடக்கும் போட்டியில் இடம் பெறுவது யாரெல்லாம் தெரியுமா?