டெல்லி போலீஸ் உதவியை நாடிய கேகேஆர் அணியின் கேப்டனான நிதிஷ் ராணாவின் மனைவி, தனக்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில் டெல்லி போலீசுக்கு நச்சுன்னு பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி சச்சி மார்வா. இவர், கடந்த 4ஆம் தேதி தனது வேலையை முடித்துக் கொண்டு காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், அவரது காரில் மோதியதோடு, அவரை பின் தொடர்ந்தும் சென்றுள்ளனர்.
6ஆவது முறையாக வெற்றி பெறுமா மும்பை? எல்லாமே சிஎஸ்கேவுக்கு பாதகம் தான்!
இது குறித்து அவர்களது புகைப்படத்துடன் டெல்லி காவல் துறையிடமும் புகார் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர்களோ நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்து விட்டீர்கள் அல்லவா! அடுத்தமுறை அவர்கள் பைக் நம்பரை குறித்து வைத்து சொல்லுங்கள் என்று கூறியிருக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நிதிஷ் ராணாவின் மனைவி சச்சி மார்வா, அடுத்த முறை அவர்களது மொபைல் நம்பரையும் கொடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
CSK vs MI; மகுடம் சூடுமா சிஎஸ்கே; இன்று நடக்கும் போட்டியில் இடம் பெறுவது யாரெல்லாம் தெரியுமா?
டெல்லி காவல்துறையின் மெத்தனப் போக்கு சச்சிக்குப் பிடிக்கவில்லை, இந்த முறை ராணாவின் மனைவி எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பித்துள்ளார். ஆனால் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது அல்லவா. எனினும், தன்னை தானே பாதுகாத்துக் கொண்ட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.