சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான 5ஆவது டிஎன்பிஎல் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 5ஆவது போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எங்கு நடக்கிறது?
தொடக்க வீரர்களான துஷார் ரஹேஜா மற்றும் என்.எஸ். சதுர்வேத் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஷால் வைத்யாவும் 7 ரன்களில் வெளியேற திருப்பூர் தமிழன்ஸ் அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட் எடுத்து தடுமாறியது. அதன்பிறகு எஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் சங்கர் இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர்.
அதிரடி காட்டிய ஷிவம் சிங்; திண்டுக்கல் டிராகன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணன் 36 ரன்களில் வெளியேற, விஜய் சங்கரும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ராஜேந்திரன் விவேக் 26 ரன்கள் எடுத்து ஓரளவு நம்பிக்கை கொடுத்தார். இறுதியாக திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் குவித்தது.
அஸ்வின் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய ராஜ்குமார்: திருச்சி 120க்கு ஆல் அவுட்!
பந்து வீச்சு தரப்பில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியில் ஹரிஷ் குமார், ராஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பாபா அபாரஜித் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி விளையாடி வருகிறது.
இதற்கு முன்னதாக, லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணி தோல்வி அடைந்தது. இதே போன்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
34 ரன்கள் எடுத்த ஹாங்காங்: இந்திய வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு ரூ.1 கோடியும், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறும் 2 அணிகளுக்கு ரூ.40 லட்சமும், மற்ற அணிகளுக்கு ரூ.25 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.