ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 50 சதவிகிதமாக குறைந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது. எனவே 58.93 சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு வலுவடைந்துள்ளது.
2021-2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தான் ஆதிக்கம் செலுத்தின. இலங்கை 3ம் இடத்திலும், இந்திய அணி 4ம் இடத்திலும் இருந்தன.
ஆனால் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 58.93 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேற, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி 54.55 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு பின் தங்கியது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் தோற்றதால் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 50 சதவிகிதமாக குறைந்து புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது தென்னாப்பிரிக்க அணி. தென்னாப்பிரிக்காவை விட இந்திய அணி சுமார் 9 சதவிகிதம் அதிகம் பெற்றிருப்பதால் ஃபைனலுக்கான வாய்ப்பு வலுத்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். எனவே முதலிரண்டு இடங்களை பிடிப்பது அவசியம். இந்தியாவிற்கு போட்டியாக இருந்த தென்னாப்பிரிக்க அணி 9 சதவிகிதம் பின் தங்கி 4ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது. இலங்கை அணி 3ம் இடத்தில் உள்ளது.
இந்திய அணி அடுத்ததாக நடக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 அல்லது 2-0 என வென்றாலே ஃபைனலுக்கு முன்னேறிவிடும். தென்னாப்பிரிக்கா அடுத்து ஆடும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஜெயித்து, இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஜெயித்தாலும் கூட, இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-1 அல்லது 3-0 என வீழ்த்தினால் கண்டிப்பாக ஃபைனலுக்கு முன்னேறிவிடும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை வலுவாக பிடித்துள்ள இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பு வலுத்துள்ளது.