ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை வலுவாக பிடித்த பாகிஸ்தான்..! சிக்கலில் இந்தியா

By karthikeyan VFirst Published Jul 21, 2022, 7:43 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பின், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி 3ம் இடத்தை வலுவாக பிடித்துவிட்டது.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும்.

இதையும் படிங்க - அந்த ஒரு குறையை மட்டும் சரி செஞ்சுட்டா, ஷ்ரேயாஸ் ஐயர் தான் அடுத்த கேப்டன்! செம திறமையான வீரர்- ஸ்காட் ஸ்டைரிஸ்

கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்  ஃபைனலில் ஆடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி 71.43 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 70 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் தோற்றபின்னரும் இந்தியா தான் 3ம் இடத்தில் இருந்தது. ஆனால் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணியின் புள்ளிகள் குறைக்கப்பட்டன. அதன்விளைவாக 52.08 சதவிகிதத்துடன் இந்திய அணி 4ம் இடத்திற்கு பின் தங்கியது. பாகிஸ்தான் 3ம் இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க - ரோஹித்துக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் அவர்தான்..! ராகுல்லாம் இல்ல.. முன்னாள் வீரர் அதிரடி

சிறிய புள்ளிகள் வித்தியாசத்துடன் 3ம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பின், 58.33 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தை வலுவாக பிடித்துவிட்டது. பாகிஸ்தானை விட 6 சதவிகிதம் பின் தங்கியிருக்கும் இந்திய அணிக்கு பாகிஸ்தானை முந்தி 3ம் இடத்தை பிடித்து, அதன்பின்னர் ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா அணிகளில் ஒன்றை பின்னுக்குத்தள்ளி முதலிரண்டு இடங்களுக்குள் நுழைவது மிகக்கடினம்.
 

click me!