கோலிக்கு இவ்வளவு ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்குது..! டான்ஸ் ஆடி இணையத்தை தெறிக்கவிட்ட கோலி

Published : Jul 20, 2022, 08:10 AM IST
கோலிக்கு இவ்வளவு ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்குது..! டான்ஸ் ஆடி இணையத்தை தெறிக்கவிட்ட கோலி

சுருக்கம்

விராட் கோலி ஃபார்மில் இல்லை என்று விமர்சனம் வலுத்துவரும் நிலையில், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் டான்ஸ் ஆடி இணையத்தை தெறிக்கவிட்டுவருகிறார்.  

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, 71வது சதத்தை இரண்டரை ஆண்டுகளாக அடிக்க முடியாமல் திணறிவருகிறார். கடைசியாக 2019 நவம்பர் மாதம் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவித்துவருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அருமையான ஷாட்டுகளை மிகவும் நேர்த்தியாக ஆடி நல்ல விதமாகத்தான் தொடங்கினார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆடியதை பார்க்கையில், கண்டிப்பாக அவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் உறுதி என்றுதான் தோன்றியது. அவர் ஃபார்மில் இல்லாத வீரர் போல ஆடவில்லை. மிகவும் நேர்த்தியாக ஆடினார். ஆனாலும் ஒரு இன்னிங்ஸில் கூட பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் ஆடிய கோலி மொத்தமாக 12 ரன்கள் மட்டுமே அடித்தார். ஒருநாள் போட்டிகளில் 16 மற்றும் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். கோலி ஸ்கோர் செய்யாதது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திவருகிறது.

விராட் கோலி என்ற அடையாளத்துக்காக ஃபார்மில் இல்லாத அவரை அணியில் வைத்துக்கொண்டிருக்காமல், அணியின் நலன் கருதி ஃபார்மில் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கபில் தேவ் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து கூறினாலும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் கோலிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

ஆனால் இந்த பரபரப்பை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விராட் கோலி டான்ஸ் ஆடி மகிழ்ந்துவருகிறார். ஃபார்மில் இல்லாத கோலி விளம்பரத்தில் நடித்தது விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் கோலி அதையெல்லாம் தலைக்கு ஏற்றிக்கொள்வதேயில்லை. விராட் கோலி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ செம வைரலாகிவருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!