அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், காயத்திலிருந்து மீண்ட பும்ராவிற்கு ஐசிசி The Lord of Swing The Returns of the King என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டப்ளின் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), முகேஷ் குமார், ஆவேஷ் கான், ஜித்தேஷ் சர்மா, பிரஷித் கிருஷ்ணா மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்பது குறித்து பார்த்தால், ஓபனிங் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. மூன்றாவதாக சஞ்சு சாம்சன் களமிறங்கலாம். அடுத்து திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!
இந்தியா பிளேயிங் 11:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார்.
அயர்லாந்து பிளேயிங் 11:
ஆண்ட்ரூ பல்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்
இந்த நிலையில், கடந்த 2022 ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக எந்தப் போட்டியிலும் விளையாடாத ஜஸ்ப்ரித் பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூலமாக அணிக்கு திரும்பியுள்ளார். ஸ்விங் மற்றும் யார்க்கருக்கு பெயர் போன பும்ராவிற்கு ஐசிசி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், The Lord of Swing The Returns of the King என்று குறிப்பிட்டுள்ளது.
Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!
இதுவரையில், 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 128 விக்கெட்டுகளும், 72 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளும், 210 டி20 போட்டிகளில் விளையாடி 256 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இந்த மாத இறுதியில் ஆசிய கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், பும்ராவிற்கு இந்த டி20 தொடர் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Asia Cup 2023: உலகக் கோப்பை கனவு முடிந்தது: ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கப்படலாம்!
இதுவரையில், இரு அணிகளும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து அணி 221 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை ஜியோ சினிமா மற்றும் Viacom18 க்கு சொந்தமான ஸ்போர்ட்ஸ் 18 இல் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கலாம்.
Coming soon 🎬 pic.twitter.com/El862zWHz3
— ICC (@ICC)