பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக மகளிர் கிரிக்கெட்டில் திருநங்கைகளுக்கு தடை – ஐசிசி அதிரடி நடவடிக்கை!

Published : Nov 22, 2023, 11:32 AM IST
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக மகளிர் கிரிக்கெட்டில் திருநங்கைகளுக்கு தடை – ஐசிசி அதிரடி நடவடிக்கை!

சுருக்கம்

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக மகளிர் கிரிக்கெட்டில் திருநங்கைகளுக்கு ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.  

ஆண்கள் போன்று மகளிரும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கிரிக்கெட்டில் பெண்களின் பாதுகாப்பு, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக திருநங்கைகள் மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் போது மகைர் கிரிக்கெட்டில் திருநங்கைகள் உயர்மட்டத்தில் பங்கேற்பதை அதிகாரப்பூர்வமாக தடை செய்தது. கடந்த 9 மாதங்களாக பல்வேறு தரப்பினருடன் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது.

அரசியலில் களமிறங்கும் ஷாகிப் அல் ஹசன் – சொந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு!

புதிதாக நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி, ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்கள், அறுவை சிகிச்சைகள் அல்லது சிகிச்சைகள் எதுவாக இருந்தாலும், பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தகுதியற்றவர்கள். பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான முன்னுரிமையை ஐசிசி அடிக்கோடிட்டுக் காட்டியது. அவர்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் பாதுகாப்பு, நேர்மை மற்றும் உள்ளடக்கம் போன்ற கொள்கைகளை வலியுறுத்துகிறது.

அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை – ஓவர்களுக்கு இடையில் 60 வினாடி, 3 முறை தாமதமானால் 5 ரன் அபராதம்!

ஐசிசி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக முதல் திருநங்கை கிரிக்கெட் வீராங்கனையாக சரித்திரம் படைத்த டேனியல் மெக்காஹே, இனி மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவரான மெக்காஹே, கனடா மகளிர் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அமெரிக்காஸ் பிராந்திய தகுதி சுற்று போட்டியில் 6 டி20 போட்டிகளில் விளையாடினார். போட்டியின் போது, ​​29 வயதான அவர் 19.66 சராசரியுடன் 118 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக மகளிர் கிரிக்கெட்டில் முதல் திருநங்கையாக தனது கிரிக்கெட் திறமையை வெளிப்படுத்தினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து கனடாவுக்கு சென்று 2021 ஆம் ஆண்டு ஆணிலிருந்து பெண்ணாக மாறி, மகளிர் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இந்திய ரசிகர்கள் மீது பற்று கொண்டவர் – ரசிகர்களை காயப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்ட வார்னர்!

மகளிர் கிரிக்கெட்டில் ஐசிசி எடுத்துள்ள இந்த முடிவு மகளிர் கிரிக்கெட்டின் சாரத்தை பேணுவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் திருநங்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ் கூறியிருப்பதாவது: "பாலினத் தகுதி விதிமுறைகளில் மாற்றங்கள் விரிவான ஆலோசனை செயல்முறையின் விளைவாகும். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதும், வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் முதன்மையான அக்கறை என்பதை எடுத்துக்காட்டிய அவர், விளையாட்டில் உள்ளடக்கியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

U19 உலகக் கோப்பை: இலங்கையிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை – தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றம் – ஐசிசி அதிரடி முடிவு!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஆஷஸ் 3வது டெஸ்ட்.. சரிந்த விக்கெட்டுகள்! சரித்திரம் படைத்த அலெக்ஸ் கேரி! ஆஸி.யை மீட்ட ஒற்றை நாயகன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உடல்நலக்குறைவு, SMAT போட்டிக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதி